அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.
அதலைச்செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சிலவேளைகளில் வயல்வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப்படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும்
இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக்காலத்தில் காய்ந்து விழுந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும். இக்கொடியின் இலைகளின் அடிப்பகுதி இதயவடிவாகவும் எஞ்சிய பகுதி ஒருபுறம் சாய்ந்தோ இருக்கும்.
இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது. இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும்
இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.
அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.
No comments:
Post a Comment