"

Tuesday, January 22, 2019

வரலாற்றில் இன்று ஜனவரி 22 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று ஜனவரி 22 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.



நிகழ்வுகள்
1506 – 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.
1798 – நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1840 – பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
1863 – ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
1879 – தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1889 – கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
1899 – ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.
1901 – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
1905 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1906 – பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1927 – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைப்பெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
1952 – உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
1964 – கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
1973 – நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1984 – ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
1992 – சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
2004 – ஆர்க்குட் தொடங்கப்பட்டது.


பிறப்புகள்
1561 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)
1788 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)
1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு (இ. 1916)
1891 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937)
1906 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1936)
1909 – ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலாளர் (இ. 1974)
1922 – தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)
1988 – கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
1666 – ஷாஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)
1901 – விக்டோரியா மகாராணி, ஐக்கிய இராச்சியம் (பி. 1819)
1922 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854)
1947 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் பன்மொழிப் புலவர் (பி. 1875)
1978 – ஹெர்பட் சட்கிளிஃப், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1894)
2005 – வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்
2008 – ஹீத் லெட்ஜர், ஹாலிவுட் நடிகர் (பி. 1979)
2014 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)

No comments:

Post a Comment

Adbox