ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றி கல் உப்பை சிறிது போடவும். மறுநாள் அதில்தான் தண்ணீரில் கரையும் அதிக சத்துக்கள் இருக்கும் இந்த பானம் நீராகாரம் என்னும் பழைய சாதம். அந்த நீருடனே சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் கடித்துகுடித்தால் வயிற்றுக்குள் ஜில்லென்று இருக்கும்.
நாம் எதையும் இலவ்சமாக நாம் செய்யும் போது அதன் அருமை தெரிவதில்லை. வெளி நாடுகளில் இந்த பழைய சாதத்தின் அருமையை பட்டியலிட்டு அதற்கு ஒரு விலையை நிர்ணயிக்கும்போது நாம் வாயைப் பிளப்போம். முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியில்கூறுகிறார்கள்.
சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக. இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் லட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. இவை நமது குடல்களை ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.
மலச்சிக்கல் :
மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து
மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.
சோர்வின்மை :
தொடர்ந்து காலை வேளையில் பழைய சாதம் சாப்பிட்டால். அன்று நாள் முழுவதும் சோர்வின்றி வேலை செய்யத் தொடங்குவீர்கள். அஜீரண பிரச்சனை குணமாகி நன்றாக
பசியெடுக்கும்.
அல்சர் :
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவந்தால் விரைவில் ஆச்சரியப்படும்படி குணமாவது தெரியும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அணுகமல் பலம் பெறலாம். நல்ல வலிமையான தசைகள் பெறலாம். ஒல்லியாக இருப்பவர்கள் சாப்பிடுவதால் உடல் போஷாக்கு பெறும்.பொலிவான தேகம் :
சருமம் புது பொலிவு பெறும். மினுமினுப்பு கூடியிருப்பதை அறிவீர்கள். ஒடுங்கிய முகம் புஷ்டியாக இருக்கும்.
No comments:
Post a Comment