இன்று மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஹானர் நிறுவனம். பல்வேறு ஃபிட்னஸ் வாட்ச் ஆனது சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்சமயம் ஹானர் பேண்ட் 4 என்ற ஃபிட்னஸ் ட்ராக்கர் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிட்னஸ் ஜியோனி பிட்னஸ் 3 க்கு போட்டியாக வெளிவந்துள்ளது. இது இந்திய சந்தையில் 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை விற்பனையாகும் என தெரிவித்துள்ளது.
இந்த ஃபிட்னஸ் வாட்ச் ஆனது பல்வேறு நிறங்களில் தரவுகளை டிஸ்ப்ளே செய்கிறது. ஜியோமி உடன் ஒப்பிடுகையில் இது வண்ணமயமான தாக காட்சியளிக்கிறது. ஹானர் பேண்ட்-ன் வண்ணமயமான தொடுதிரையில் நம்மால் நேரம், தேதி, வானிலை நிலவரம், ப்ளூடூத் நிலவரம் மற்றும் உடற்பயிற்சியால் எரித்த கலோரி அளவு போன்றவற்றை தெளிவாக காண முடியும். அது மட்டுமில்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணலாம். இதய துடிப்பு, தூங்கிய நேரம், அமைப்பு மற்றும் பல முக்கிய தகவல்களை காண முடியும்.
நமக்கு வரும் அழைப்புகளை ஹானர் பேண்ட்-ல் இருந்து ஏற்கவோ, நிராகரிக்கவோ முடியும். மற்ற ஃபிட்னெஸ் ட்ராக்கர்களை போலவே ஹானர் பேண்டிலும், நம்மால் நடந்த தூரம், தூக்கத்தின் தரம், இதய துடிப்பு, ஓட்டம், நடை பயற்சி மற்றும் நீச்சல் போன்ற பல உடற்பயிற்சிகளை கண்காணித்துக்கொள்ள முடியும்.
இவை அனைத்தையும் நாம் ஒர்கவுட் என்ற ஆப்ஷனில் பார்க்க முடியும். ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போன்றவற்றை கண்காணிப்பதுடன் துரித கண்ணசைவு தூக்கம் (REM), தூங்கிய நேரம், மூச்சுவிடுதலின் தரம் போன்ற மற்ற அம்சங்களையும் ஹானர் பேண்ட் 4 கண்காணிக்கிறது. ஹானர் பேண்ட் 4 -ல் 100mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் பேண்ட் 4 ஆனது சிலிக்கான் வாருடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. நம்மால் இதன் வாரை(ஸ்ட்ராப்) மாற்ற முடியாது.
No comments:
Post a Comment