"

Sunday, February 10, 2019

"உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" ஏன் உணவு உண்டபின் களைப்பாக உள்ளது?



இப்பிரபஞ்சத்தில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து மனிதனுக்கு இன்றியமையாதது உணவு நீர் மற்றும் காற்று. வாழ்க்கை வாழ மனிதனுக்கு ஆற்றல் அவசியமாகிறது, இதை உண்ணும் உணவிலிருந்து மனிதன் பெற்றுக்கொள்கிறான். 

ஆகவே மனிதன் தன் ஆற்றலை செலவிட்ட பின் களைப்புற்ற நிலையை அடைகிறான். இந்நிலையில் மனிதனை பசி என்னும் இயக்கம் அவனை ஆட்கொள்கிறது. சரி, பின்பு ஏன் மனிதன் பசியாறிய பின் சிறுது நேரத்தில் மயக்கமான மந்த நிலையினை ஏற்படுத்துகிறது என்பதை விவரமாகப் பார்ப்போம். 

மனிதனுக்கு எப்பொழுதெல்லாம் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது அப்பொழுதெல்லாம் அவன் பசியை உணர்கிறான். அப்பொழுதெல்லாம் அவன் சுவையான உணவினை உண்டு பசியாறி இழப்பை சரி செய்கிறான். ஆனால் உண்மையில் பசியாறிய பின்பு அவன் இயக்கம் சுறுசுறுப்படையும் வேண்டும் மாறாக ஒருவித சோர்வினை உணர்கிறான். 

ஏனென்றால் உண்ட உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ஜீரண நீருடன் இணைந்து ஆற்றலை உருவாக்க வேண்டும். இந்த ஆற்றலை உருவாக்கவே கார்போஹைட்ரேட்டில் குளுக்கோசானது மனித உடலில் சுரக்க கூடிய இன்சுலின் உடன் இணைந்து ஆற்றலை சேமித்து வைக்கக்கூடிய பணியினை செய்கிறது. 

இந்த நேரத்தில் உடலில் பல்வேறு பாகங்களில் இயங்கக்கூடிய ரத்த ஓட்டமானது சிறிதளவு குறைந்து மனிதனின் குடல் பகுதியில் அதிகமாக ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.  இந்த நேரத்தில் இன்சுலின் மூளைக்குள் ட்ரிப்டோபானின் சுரப்பை அதிகரிக்கும். 

இது செரோட்டினின் மற்றும் மெலடானினாக மாற்றப்படும். செரோட்டினின் உங்களை மகிழ்ச்சியாக உணர செய்யும், சாப்பிட்டவுடன் மகிழ்ச்சியாக உணர காரணம் இந்த ஹார்மோன்தான். மெலடானின் உங்களை தூங்க தூண்டும். எனவேதான் நாம் சாப்பிட்டவுடன் ஒருவித களைப்பை உணர்கிறோம்.

No comments:

Post a Comment

Adbox