"

Monday, January 21, 2019

வரலாற்றில் இன்று ஜனவரி 21 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜனவரி 21 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.



நிகழ்வுகள்

1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார். 1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். 1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1941 – இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின. 1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது. 1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது. 1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. 2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன. 2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார். 2009 – செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்ட தினம்.

பிறப்புகள்  

1912 – கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) 1953 – பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 1963 – அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள் 

1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754) 1924 – விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870) 1926 – கேமிலோ கொல்கி, இத்தாலிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843) 1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய செயல்முறையாளர் (பி. 1886) 1950 – ஜார்ஜ் ஆர்வெல், இந்திய-ஆங்கிஏய எழுத்தாளர் (பி. 1903) 1989 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ வல்லுனர் (பி. 1914) 1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் 2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்.

No comments:

Post a Comment

Adbox