"

Wednesday, January 2, 2019

எந்த ஆண்டிலிருந்து ஜனவரி 1-ம் தேதியை அனைவரும் கொண்டாடக்கூடிய புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.


இன்று உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடக் கூடிய ஒரு பொதுவான நாள் என்றால் அது ஆங்கில புத்தாண்டு. 


அனைத்து தரப்பு மக்களும் மதம் இனம் மொழி ஆகியவற்றை கடந்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர் . இந்த நாள் நிர்ணயம் செய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது. 

பல ஆண்டுகளுக்கு முன்பாக மார்ச் 25ஆம் தேதி இயேசுவின் தாய் மேரி கருவுற்றிருந்த தினத்தை புத்தாண்டாக கொண்டாடி இருந்திருக்கின்றனர். அதன் பின்பு ரோமானியர்கள் சூரிய நகர்வை கொண்டு மார்ச் முதல் தேதியை புத்தாண்டு தினமாக மாற்றியமைத்தனர். இந்த காலகட்டத்தில் வருடத்திற்கு மட்டும் பத்து மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் ரோமானிய மன்னர்களில் ஒருவரான நுமா பொம்பிலியஸ் என்பவர் புதிதாக இரண்டு மாதங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஜனவரி என கடவுள் நினைவாக பெயர் வைத்தார். 

இந்த காலண்டர் ஜூலியன் காலண்டர் என அழைக்கப்பட்டது. இவ்வாறாக மாறி மாறி புத்தாண்டு தினத்தை கொண்டாடுவது போப்பாண்டவர் 13-வது போப் ஆண்டவர் கிரிகோரி 1582 ஆம் ஆண்டு ஜூலியன் காலண்டர் தடைசெய்து, வருடத்திற்கு 365 நாட்கள் என கணக்கிட்டு ஜனவரி ஒன்றாம் தேதி கிரிகோரியன் காலண்டர் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார். இதனை நாம் பின்பற்றி ஜனவரி முதல் நாளை ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றோம்.

No comments:

Post a Comment

Adbox