"

Wednesday, January 2, 2019

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க அனுமதி


இந்நிலையில் இவ்வாண்டு பள்ளி, கல்லூாரிகள் திறந்து, 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இதனால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருசில இடங்களில் பஸ்களில் ஏறிய மாணவர்கள், பாஸ் இல்லை எனக்கூறி கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதையடுத்து அரசை கண்டித்து மாணவ, மாணவியர் ஆங்காங்கு வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயைடுத்து சம்மந்தப்பட்ட பிரச்னை விஸ்வரூம் எடுத்தது. அப்போது தமிழக அரசு, 'ஸ்மார்ட் கார்டு வடிவில் பாஸ் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்ததும் பாஸ் விரைவில் கொடுக்கப்பட்டு விடும். அதுவரை பழைய பஸ் பாஸ்களை கொண்டும், சீருடை அணிந்து கொண்டும் பயணிக்காலம்' என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவித்த பிறகும் பல பஸ்களில், மாணவ, மாணவியர் இறக்கிவிடப்பட்டனர்.  அதில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களை கொண்டு டிசம்பர், 2018 வரை பயணிக்கலாம் என நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் பள்ளி, கல்லூாரிக்கு செல்லும் மாணவர்கள் நிம்மதியாக சென்று, வந்தனர். தற்போது சம்மந்தப்பட்ட தேதியானது முடிவடைந்து விட்டது. இதனால் மாணவர்கள், மீண்டும் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தின் காரணமாக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏழை, எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும்,புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



No comments:

Post a Comment

Adbox