"

Monday, December 31, 2018

முதன்முதலாக 2019ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடிய மக்கள்....!


நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடு. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. 

இந்தியாவிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நலனையும் தரவேண்டும் என பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். NXT TAMIL 2019ம்  ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment

Adbox