உடல் எடையைக் கட்டுப்படுத்த எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பானங்களின் மூலமாக எளிமையாக உடல் எடையைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
இளநீர் இயற்கையாகவே நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகின்றது. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது நம்முடைய உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளைத் தருகின்றது. அதனால் இயல்பாகவே எடையைக் கூட்டாமல் உடலைச் சிக்கென்று வைத்துக் கொள்ளும்.
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக பிளாக் காபி குடித்தால் உங்களால் மிகச்சிறந்த மாற்றத்தைக் காண முடியும். அதோடு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் காக்கவும் பிளாக் டீ உதவி புரிகிறது. அதனால் பிளாக் காபி மூலமாகவே உடல் எடையைக் குறைக்க முடியும்.
வெஜிடபிள் ஜூஸில் நிறைய நன்மைகளும், நார்ச்சத்துக்களும் கொண்டுள்ளது. சர்க்கரைச் சத்து குறைவு. அதனால் உடல் எடை குறைப்பினில் மிகப் பெரிய இடத்தை வெஜிடபிள் ஜூஸ் பெறுகிறது. உங்களுடைய வழக்கமான உணவுகளுக்கு முன்பாக, ஒரு டம்ளர் வெஜிடபிள் ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடையைக் குறைக்க முடியும்.
கிரீன் டீ எவ்வளவு ஆரோக்கியமானது, க்ரீம் டீ குடித்தால் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் குறையும். ஆகவே நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு கப் கிரீன் டீ குடித்து வந்தால் உடல் பருமன் வேகமாக குறையும்.
No comments:
Post a Comment