"

Friday, August 31, 2018

உடல் வலியை மற்றும் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் எலுமிச்சை களிம்பு தயாரிப்பது எப்படி?


பொதுவாக 40 வயது நெருங்கும் நபர்களுக்கு கை கால் வலி மூட்டு வலி என்பது ஒரு சர்வ சாதாரணமாக காணப்படக்கூடிய வியாதியாக உள்ளது. இந்த வலியினை எலுமிச்சை தோலின் மூலமாக குணப்படுத்தக்கூடிய களிம்பை தயாரிப்பது எப்படி என்ன காண்போம். 


எலுமிச்சையில் அதிக அளவு சிட்ரிக் ஆசிட் கொண்டுள்ளது,அதோடு மட்டுமல்லாமல் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் பெற்றுள்ளது, கூடவே வைட்டமின் ஏ பி6  பி1 மற்றும் தாது உப்புக்கள் பொட்டாசியம் கால்சியம் கொண்டுள்ளது. 

வயது முதிர்வின் காரணமாக உடலில் ஏற்படும் அநேக வலிகளுக்கு காரணம் சீரான ரத்த ஓட்டம் இல்லாதது. இந்த காரணத்தினால் கை கால்களில் வலி முட்டிகளில் வலி ஏற்பட்டு பெரும் உபாதையை தருகிறது. 

இதனை கட்டுப்படுத்த எலுமிச்சை தோலை நீக்கி கொண்டு வீட்டிலேயே எளிய மருந்து தயாரிக்கலாம். இதற்கு துருவிய எலுமிச்சை தோல் 50 கிராம், ஆலிவ் எண்ணெய் 100 ml, யூகலிப்டஸ் இலை சிறிதளவு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து அப்படியே மூடி இரண்டு வாரங்கள் வைத்திருக்க வேண்டும். இப்பொழுது இறுக்கிய நிலையில் களிம்பு உருவாகியிருக்கும். 

இந்த களிம்பை உடல் வலி மற்றும் மூட்டு வலி பாதித்த பகுதியில் பயன்படுத்தும்போது ரத்த ஓட்டம் அதிகரித்து வலியை கட்டுப்படுத்தும். 

No comments:

Post a Comment

Adbox