தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளுக்கு சமமான பொது சட்ட விதிகளை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.தனித்தனி சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்பட்டு வந்தன. இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும் பரிந்துரைத்தன.
இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
முக்கிய அம்சங்கள்
* அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்
* மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணய கமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும்
* ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும்
* தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம்.
* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source
Kalvimalar.
source
Kalvimalar.
No comments:
Post a Comment