முதல் முறையாக 84 எம்.பி.பி.எஸ் இடங்களை தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்தது வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி. மருத்துவக் கல்வியில் உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை (நீட்) கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.எம்.சி. நிர்வாகம் இந்திய மருத்துவக் கவுன்சில் அளித்த ஒரே ஒரு மாணவர் தவிர மீதமுள்ள 99 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ள நிலையில் 84 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்துள்ளது. மீதமுள்ள 16 இடங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப உள்ளது. மேலும் தாங்கள் சமர்ப்பித்த 84 எம்.பி.பி.எஸ். இடங்கள் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்'' என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் வேலூர் சிஎம்சி நிர்வாகம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment