இன்று மாலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தமிழக மாணவர்கள் 40% தேர்ச்சியை தேர்ச்சியை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் மே 6ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தமிழக மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், தெலுங்கானாவை சேர்ந்த ரோகன் 690 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், டெல்லியைச் சேர்ந்த ஷர்மா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 12-ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www. cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment