"

Saturday, June 2, 2018

அமையுமா ஆண்களுக்கான "புருஷா கமிஷன்"


மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக பெண்கள் ஆணையம் சிறுபான்மையினர் நல ஆணையம் குழந்தைகள் நல ஆணையம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆண்களின் மீது அடக்குமுறை செலுத்தும் பெண்களை கட்டுப்படுத்த அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே வலுத்து வருகிறது. 


தற்போது ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி நன்னாபேனி ராஜகுமாரி பெண்களின் அவர்கள் டார்ச்சர் தாங்காமல் பாதிப்படையும் ஆண்களை மீட்க ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் மனைவியிடம் பாதிக்கப்படும் உங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே வலுத்து வருகிறது இந்த நேரத்தில் ஆண்களின் கண்ணீரை துடைக்க முன்வந்துள்ளார் ஆந்திர பிரதேச பெண்கள் கமிஷன் தலைவியும் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும் அவர் அண்மையில் அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் ஆண்கள் நலனுக்கு தனியாக கமிஷன் அமைக்க வேண்டுமென கூறியுள்ளார். 

"புருஷா கமிஷன்"  என்ற பெயரில் அமைந்தால் பெண்களிடம் பாதிப்படையும் ஆண்களை காக்க துணை நிற்கும் மேலும் ஆண்களுக்கு தகுந்த பாதுகாப்பும் தவறான புகாரின் பேரில் அடக்குமுறையை செலுத்தும் பெண்களுக்கு ஒரு கடிவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். ஒருவேளை "புருஷா கமிஷன்"  கமிஷன் அமைந்தால் மனைவியிடம் கொடுமையை அனுபவித்து வரும் கணவன்மார்களுக்கு ஒரு காவல் தெய்வமாக இந்த அமைப்பு  திகழும்.

No comments:

Post a Comment

Adbox