"

Saturday, June 9, 2018

2018 - 19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்



  • பணி நிரவல் செய்த பிறகு தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
  •  கலந்தாய்வு புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படும்.
  • ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து வேறு கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் பெறும் தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கும் CEO தான் ஆணை வழங்குவார்.
  • மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன் பிறகு தான் spouse.
  • கலந்தாய்வு விண்ணப்பத்துடன் முன்னுரிமைக்கான சான்றிதழ் இணைத்து கொடுக்க வேண்டும்.
  • இந்த ஆண்டு முதல் பொது கலந்தாய்வில் மாறுதல் பெறும் ஆசிரியர் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
  • முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்ற ஆசிரியரின் மாறுதல் ஆணையில் முன்னுரிமை குறிப்பிட வேண்டும்.
  • பத்தி 15-ன் படி பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல், பிறகு தான் பதவி உயர்வு என்ற முறை பின்பற்ற வேண்டும்.
  • 01.06.2017 க்கு முன் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.(2017 - 18 ல் பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட தேதியில் இருந்து விதிவிலக்கு)
  • இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெறுதல் மாறுதல் பெரும் ஆசிரியர்கள் மூன்று வருடங்கள் அதே இடத்தில் பணி செய்ய வேண்டும்.
  • ஓர் ஆண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு எந்த பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை.( 2017 - 18 பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தவிர).

No comments:

Post a Comment

Adbox