"

Sunday, June 17, 2018

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 லைவ்


பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நேரடி மிகவும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் season 2 நிகழ்ச்சி இன்று முதல் விஜய் டிவியில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் பத்தரை மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இன்று இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் அறிமுக விழா உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 


இதில் மிகவும் பிரபலமான நடிகை மற்றும் நடிகர்கள் பங்கு பெற்றுள்ளனர். கடந்த சீசனில் கலந்துகொண்டு பாதியிலேயே சர்ச்சையில் வெளியேறிய நடிகை  ஓவிய மீண்டும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் அதேபோல் மற்ற போட்டியாளர்கள் யஷிக்கா ஆனந்த், ஜனனி ஐயர், டேனியல் அன்னே போப், பொன்னம்பலம், ஐஸ்வர்யா தத்தா, மகாத் ராகவேந்திரா, மம்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, நித்திய தாடி பாலாஜி, ஆர்.ஜே மமதி சரி, கவின் அனந்த வதனநாதன், பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் பங்கேற்றுள்ளனர்.

பல கேமராக்கள், 15 போட்டியாளர்கள் உடன் இந்நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. பிக் பாஸ் season2 நிகழ்ச்சியினை மீண்டும் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய நிகழ்ச்சியாக விஜய் டிவியில் திரும்பியுள்ளது. 

நிகழ்ச்சிகள், சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் மூலம் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி மீண்டும் இரண்டாம் பாகமாக வலம் வர உள்ளது. கடந்த பிக் பாஸ் தொடரின் நடிகை ஓவியா பல சர்ச்சைகளையும் உருவாக்கி பாதியிலேயே வெளியேறி மக்களிடையே பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தினார்.  மீண்டும் அவர் பங்கு பெற உள்ளார். மேலும் கவர்ச்சியில் புகழ்பெற்ற நடிகை மும்தாஜ் மற்றும் பல முன்னணி நடிகை, நடிகர்கள்  பங்கு பெறுவதால் இந்நிகழ்ச்சி போட்டியாளர்களிடையே மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Adbox