ஜூன் ஒன்றாம் தேதி தமிழகத்தில் அனைத்து அரசு தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்பு திறக்கப்படுகின்றன. தமிழக அரசு கல்வித்தரத்தினை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய கல்வியாண்டில் தமிழக அரசு 1,6,9,11 வகுப்பிற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய பாடபுத்தகத்தில் புதிதாக ஸ்கேனர் வசதியுடன் கூடிய புத்தகமாக அச்சிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவர்கள் பாடம் அனிமேஷன் மற்றும் வீடியோ சார்ந்த தகவல்களை எளிதாக ஸ்மார்ட்போன் மூலம் பெற இயலும். இது மாணவர்களை ஊக்கம் ஊட்டுவதோடு மட்டுமல்லாமல் பாடம் சார்ந்த தகவல்களை மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் அமையும். இதனால் மாணவர்கள் கல்வியின் மீது ஆர்வம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாட புத்தகங்கள் முதலமைச்சர் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகங்கள் இலவசமாக விநியோகிப்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளை பள்ளி திறப்பு தினத்தன்று அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் ஒரே சீரான யூனிபார்மை மாணவ மாணவியர் அணிந்துவர உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பள்ளி துவங்கும் முன் அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment