"

Tuesday, May 29, 2018

பிளஸ் 2 /பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு தேர்வு மற்றும் தேர்வு அட்டவணை விவரம்


பிளஸ் 2 உடனடி சிறப்பு தேர்வு வருகின்ற புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடி சிறப்புத் தேர்வு திட்டத்திற்கு விண்ணப்பித்து இந்த கல்வியாண்டு தேர்ச்சி பெற்று உடனடியாக உயர்கல்வி பயில இயலும். 


பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு 30.05.18 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க June 2 கடைசி நாளாகும்.இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு கால அட்டவணை 

June 25 - மொழிப் பாடம் தாள் -1

June 26 - மொழிப் பாடம் தாள் -2

June 27 - ஆங்கிலம் முதல் தாள்

June 28 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

June 29 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்.

June 30 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, வணிகவியல், செவிலியர் (தொழில் பிரிவு), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.

July 2 - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்.

July 3 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்காய்வு, அலுவலக மேலாண்மை.

July 4 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரப் பணியாளர், மின்னணுவியல் உபகரணங்கள், கட்டட வரைபடளாளர், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தானியங்கி இயந்திரங்கள், ஜவுளி தொழில்நுட்பம்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வு கால அட்டவணை

June 28 - தமிழ் முதல் தாள்

June 29 - தமிழ் இரண்டாம் தாள்

June 30 - ஆங்கிலம் முதல் தாள்

July  2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

July  3 - கணிதம்

July  4 - அறிவியல்

July  5 - சமூக அறிவியல்

July  6 - விருப்ப மொழிப் பாடம்

No comments:

Post a Comment

Adbox