"

Saturday, June 2, 2018

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 1Aமற்றும் 1B வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 1Aமற்றும் 1B  வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து குரூப்-1 போட்டித் தேர்வுக்கு வயது வரம்பு தளர்த்த கோரி வந்ததை அடுத்து, தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்கள் சட்டசபையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 110 விதியின் கீழ் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதை அறிவித்தார். 


அதன்படி தற்போதுள்ளதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 1Aமற்றும் 1B  வயது வரம்பு, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - டி.என்.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 35ல் இருந்து, 37 ஆக உயர்த்தப்படுகிறது. இதர பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 30ல் இருந்து, 32 ஆகஉயர்த்தப்படுகிறது.  இந்த வயது வரம்பு தகுதியானது வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

பதஞ்சலி சிம் அட்டை: ஒன்றைப் பெறுவது எப்படி?



No comments:

Post a Comment

Adbox