நடிகர் ஆர்யா டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ளபோகும் பெண்ணை தேர்ந்தெடுக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. 16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல கட்ட போட்டிகளுக்கு பின் மூன்று பெண்களே மீதம் உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான ஜாக்குலின். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வரும் இவர் சினிமா துறையிலும் காலெடி வைத்து விட்டார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோதுதான் ஆர்யாவின் நிகழ்ச்சி குறித்த தன்னுடைய கருத்தினை தெரிவித்திருந்தார். 'ஆர்யாவின் திருமண நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என அவரிடம் எழுப்பப் பட்ட கேள்விக்கு, 'சத்தியமாக அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை, ஆனால் நான் அவர் இடத்தில் இருந்தால் இப்படி திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.
ஒரு சமையல் வேலை செய்பவரை வேண்டுமானால் இப்படி போட்டி வைத்து தேர்ந்தெடுக்கலாம், ஆனால் தன்னுடைய மறு பாதியாக ஆகப் போகும் மனைவியை இப்படி போட்டி வைத்து தேர்ந்தெடுப்பது சரியல்ல' என பதில் அளித்திருந்தார்.
No comments:
Post a Comment