பேஸ்புக் வலை தளத்தில் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்ற தகவல் கடந்த 23ம் தேதி வெளியானது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்ரல் 7ம் தேதி ஆஜராகி பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து மத்திய அரசுக்கு பேஸ்புக் சார்பில் பின் வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
தகவல் திருட்டு காரணமாக 5.6 லட்சம் இந்தியர்களுக்கு சிறிய அளவில் பாதிப்பு இருக்கும். இந்தியாவில் 335 பயனாளர்கள் 'திஸ்இஸ்யுவர்டிஜிட்டல்லைப்' (thisisyourdigitallife) என்ற செயலியை பயன்படுத்தியுள்ளனர். இது சட்டவிரோதமாக பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்திற்கு அளித்தது. மேலும், இந்த செயலியை பயன்படுத்தியவர்களுடன் நண்பர்களாக இருக்கும் 5,62,120 பேரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. தகவல் திருட்டு காரணமாக சர்வதேச அளவில் 0.6 சதவீத இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். தகவல் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment