"

Sunday, April 1, 2018

இளைஞனாக தோற்றமளிக்கும் 68 வயது நபர் - ரகசியம் சொல்கிறார்!


சீனாவின் ஷாங்காய் நகரில் ஹீ ஹாய் என்பவர் 1950 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இப்போதும் 20 வயது இளைஞன் போன்று தோற்றமளிக்கிறார் இவர்.
இவர் சமீபத்தில் முதியவர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் இவரின் இளமை தோற்றத்தை பார்த்து, இவர் எதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர் தனது வயதை தெரிவித்துள்ளதுடன், அன்று முதல் பிரபலமடைந்துள்ளார். மேலும் மிக நவீன தாத்தா என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதனடிப்படையில் அவர் தனது இளமை ரகசியம் குறித்து கூறியுள்ளதாவது.
"உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறேன்.தினமும் 30 நிமிடங்கள் தலைகீழாக தொங்குகிறேன். இப்படி தலைகீழாக தொங்கும் பயிற்சி காரணமாக தோல் சுருக்கமின்றி பளபளப்புடன் இருக்கிறது. முடி உதிர்வதில்லை. சில சத்தான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறேன்.
எல்லாவற்றையும்விட முக்கியம் எனது சிந்தனை முறை. நான் 20 வயது இளைஞனாகவே எப்போதும் உணர்கிறேன். எனது கடைசி மூச்சுவரை இளைஞனாகவே உணர்வேன், சுறுசுறுப்பாக செயல்படுவேன். என்னைப்பொறுத்தவரை வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே."
அவர் பேச்சை கேட்கும்போதே நமக்கும் புத்துணர்வு பிறக்கிறது.

No comments:

Post a Comment

Adbox