"

Monday, March 26, 2018

புளூடூத் புரட்சி JVC புளூடூத் ஸ்பீக்கர் நவீன டெக்னாலஜியுடன் அறிமுகம்


ஜேவிசி என்ற நிறுவனம் இந்தியாவில் XS-XN226 என்ற புதிய வகை புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியாவில் கார் ஸ்பீக்கரை அறிமுகம் செய்து ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில் தற்போது புளூடூத் ஸ்பீக்கரையும் அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஜேவிசி நிறுவனத்தின் முதல் போர்ட்டபிள் ஸ்பீக்கர் என்பதால் இந்த நிறுவனத்தின் இந்த ஸ்பீக்கருக்கு பயனாளிகள் மிகப்பெரிய வரவேற்பை அளிப்பார்கள் என்பதோடு இந்நிறுவனத்திற்கு நன்றியும் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். ஜேவிசியின் அல்ட்ரா தின் டிசைன் கொண்ட இந்த புளூடூத் ஸ்பீக்கர் விலை ரூ.1,999 மட்டுமே.
ஜேவிசியின் XS-XN226 புளூடூத் ஸ்பீக்கரின் பின்பக்கத்தில் ஒரு ஹோல்டர் இருக்கும் என்பதால் அதை ஸ்டாண்ட் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த ஸ்பீக்கர் ரப்பர் ஆயில் கொண்டு கோட்டிங் செய்யப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரின் மூலம் கேட்கப்படும் இசை மற்றும் ஒலிகள் வாடிக்கையாளர்களுக்கு ஒருவித புது அனுபவத்தை கொடுக்கும் என்று ஜேவிசி கூறியுள்ளது. அந்த வகையில் அதிநவீன டெக்னாலஜியால் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இந்த XS-XN226 ஸ்பீக்கரில் 1000mAh சார்ஜ் செய்யும் வகையிலான பேடட்ரி உள்ளது. இதன் பவர் ஐந்து முதல் எட்டு மணி நேரம் இருக்கும் என்பதால் இடையூறு இன்றி இசையை ரசிக்கலாம். மேலும் இந்த ஸ்பீக்கரில் 5000W PMPO மியூசிக் பவர் உள்ளது என்பது இசை ரசிகர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் செய்தி. இதன் கனெக்டிவிட்டி குறித்து பார்த்தோம் என்றால் புளூடூத் தவிர, ஏயூஎக்ஸ் அவுட்புட், டிஎஃப் கார்டு சப்போர்ட் மற்றும் அவுட்புட் போர்ட் ஆகியவை உண்டு. இந்த வகை ஸ்பீக்கள் ஆன்லைனில் பிளிப்கார்டிலும், குரோமா ஸ்டோர்களிலும் தற்போது விற்பனைக்கு உள்ளது.

No comments:

Post a Comment

Adbox