"

Monday, March 26, 2018

#DeleteFacebook பேஸ்புக் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருகிறது..!


பேஸ்புக் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கங்களை எலன் மஸ்க் டெலீட் செய்து #DeleteFacebook இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' (Space X) என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் ஆவார். அரசின் உதவி பெற்றும், உதவி இன்றியும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை விண்வெளி ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
எலன் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான டெஸ்லா, அதிவேக மின்னணு கார்களையும், சோலார் பேனல்களையும் தயாரித்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கங்கள் இருந்தன.
தற்போது அவற்றை டெலீட் செய்து #DeleteFacebook சமூக வலைத்தள இயக்கத்தில் எலன் மஸ்க் இணைந்துள்ளார். அந்த பக்கங்களை சுமார் 2.6 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை தொடர்ந்து, பேஸ்புக் மீதான நம்பகத் தன்மை மக்களுக்கு வெகுவாக குறைந்துள்ளது. எனவே இதுவே பேஸ்புக் கணக்கை டெலீட் செய்ய சரியான நேரம்" என்று சொல்லி, சமூக வலைதளங்களில் #DeleteFacebook என்ற ஹேஷ்டேக்கை பலரும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Adbox