பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ள 24 மணி நேர கல்வி உதவி மையம் தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு உதவும் வகையில் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பாடங்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் 24 மணி நேர கல்வி உதவி மையத்தை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கடந்த 1ந்தேதி தொடங்கி வைத்துள்ளது.
இந்த கல்வி உதவி மையத்தின் அவசர அழைப்பு எண்ணான 14417 என்ற எண்ணிற்கு இதுவரை 23 ஆயிரம் பேர் தொடர்பு கொண்டு பயன் பெற்றுள்ளதாகவும், தினமும் ஏராளமான மாணவர்கள் அழைத்து பயன் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
15 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த கல்வி உதவி மையத்தில் பணியில் உள்ளனர். பகலில் 3 மனோதத்துவ நிபுணர்களும், குறிப்பிட்ட தேர்வுக்குறிய பாட ஆசிரியர்களும் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க எபோதும் தயாராக உள்ளனர். நள்ளிரவிலும் இந்த உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளுக்கு உரிய பதில் அளிக்கப்படுகின்றது. உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளுக்கு தகுந்த பதில் அளித்து வருகின்றனர்
தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவர்கள், மதிப்பெண் குறைந்துவிடுமோ, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற கலக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி வாழ்வில் ஒளிர நம்பிக்கையூட்டுகின்றனர் மன நல ஆலோசகர்கள்
பாடம் தொடர்பான சந்தேகங்களை தினமும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றும் அந்த நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தேர்வு குறித்தும் பாடங்களை எளிதாக படிப்பது குறித்தும் கலந்துரையாடி உதவிபுரிகிறார்கள். மற்ற நேரத்தில் தொடர்பு கொள்பவர்களின் அழைப்புகள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுகின்றது
அதுமட்டுமல்லாமல், 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் உயர் கல்வியில் என்ன படிப்புகள் படிக்கலாம்? எந்த கல்லூரிகளில் சேரலாம் ? எங்கு என்ன பாடப்பிரிவுகள் உள்ளது ? தற்போதைய வேலைவாய்ப்பு தேவை உள்ள பாடப்பிரிவுகள் என்ன ? என்பது குறித்த பயனுள்ள தகவல்களையும் கேட்டு பெறலாம் என்கிறார் இந்த உதவி மைய ஒருங்கிணைப்பாளர்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் நாளுக்கு நாள் செய்து வரும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து
No comments:
Post a Comment