"திருடவில்லை அனுமதியுடன் தகவல்களை பெறுகிறோம் "பேஸ்புக் நிறுவனம் தகவல் ஒன்றில் தெரிவித்துள்ளது.பேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக தகவல் வெளியானது. இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.
இந்நிலையில், பேஸ்புக், பேஸ்புக் லைட், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற பேஸ்புக் மொபைல் அப்ளிகேஷன்களை பயன்படுத்துபவர்கள் தாங்களே தங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள், யாருக்கு, எப்போது, எவ்வளவு நேரம் போனில் பேசுயுள்ளார்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.அப்ளிகேஷன்களை மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது,Turn On என்பதை க்ளிக் செய்துவிட்டால் எல்லா தகவல்களையும் பேஸ்புக் பயன்படுத்த அனுமதிப்பதாக அர்த்தம்.திருடவில்லை, அனுமதியுடன் பெறுகிறோம் என்கிறது பேஸ்புக்.
No comments:
Post a Comment