டாடா மோட்டார்ஸ் ஹைட்ரஜன் எரிபொருளாக கொண்ட வாகன தயாரிப்பில் மும்முரமாக
சோதனை செய்து வந்தது, டாடா ஸ்டார்பஸ்ஸின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் இன்ஜின் தண்ணீர் மற்றும் வெப்பத்தால் இயக்கப்படுவதால் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பில்லை. மாசுபாடு மட்டுமின்றி, சத்தத்திற்கும் இடமில்லை.இந்த பேருந்தில் 30 பயணிகள் அமரலாம்.வழக்கமான இன்ஜின்கள் கொண்ட பேருந்துகள் 20% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. ஆனால் ஸ்டார்பஸ் எரிபொருள் இன்ஜின் கொண்ட பேருந்துகளில் 40-60% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது மூன்று மடங்கு அதிகம். ஸ்டார்பஸ் எரிபொருள் வாகனங்கள் எரிபொருள் பயன்பாட்டை 50% அளவிற்கு குறைக்கின்றன.
No comments:
Post a Comment