"

Monday, March 26, 2018

பான் - ஆதார் இணைப்பு செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது,?


ஆதார் இணைப்புக் கட்டாயம் என்று அரசு கூறிவந்த அனைத்துத் திட்டங்களுக்கும் காலவரையின்றிக் காலக்கெடுவை நீட்டிப்பதாகவும், அதார் குறித்த அனைத்துக் குழப்பங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கும் முடிவு எடுக்கப்பட்ட பிறகு இணைவு குறித்துத் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஆதார் இணைப்பினை செய்யாமல் வருமான வரியினைத் தாக்கல் செய்ய முடியாது என்று வருமான வரி துறை இணையதளம் கூறுவதால் வரி தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

வருமான வரித் துறை ஆதார் இணைப்பினை கட்டாயம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருமானால் உயர் நீதிமன்றத்தினை நாடலாம் என்று சட்ட வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.
வருமான வரி தாக்கல் செய்ய அதார் விலக்கு பெற்றுள்ளவர்கள்இந்திய குடிமக்கள் அல்லது ஒரு வருடத்தில் 182 நாட்களுக்கும் அதிகமாக இந்தியாவில் வசிப்பவர்கள் ஆதார் இணைப்பினை செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.

அதே நேரம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வரி தாக்கல் செய்ய, அசாம், ஜம்மு & கேஷ்மிர் மற்றும் மேகாலயாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்(80 வயதுக்கும் அதிக உள்ளவர்கள்) ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox