"

Monday, March 26, 2018

March 31 கண்டிப்பாக இதை எல்லாம் செய்தே ஆக வேண்டும்...!


டிடிஎஸ்
யாரெல்லாம் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்துகிறீர்களோ அவர்கள் நிதி ஆண்டின் மொத்த வாடகையில் 5 சதவீதத்தினை டிடிஎஸ் ஆகப் பிடித்தம் செய்து வருமான வரித் துறையில் செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு
வருமான வரி அதிகமாகச் செலுத்துவதைக் குறைக்க மார்ச் 31-ம் தேதிக்குள் வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

படிவம் 12பி
நடப்பு நிதி ஆண்டில் வேறு நிறுவனத்திற்குப் பணி மாற்றம் செய்து இருந்தால் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதைக் குறைக்கப் படிவம் 12பி-ஐ மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐடிஆர் தாக்கல்
2016 மற்றும் 2017 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்யவில்லை என்றால் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் திருத்தம்
2016 நிதி ஆண்டின் வருமான வரித் தாக்கலில் ஏதேனும் தவறு செய்து இருந்தால் அதனைத் திருத்தம் செய்ய 2018 மார்ச் 31 தான் கடைசித் தேதி ஆகும்.

No comments:

Post a Comment

Adbox