"

Thursday, January 3, 2019

எளிமையாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...!



சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயற்கையாகவே கணையம் இன்சுலினை சுரக்கின்றது. இன்சுலின் சர்க்கரையை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கும். உடலில் ஆற்றல் இல்லாத போது மீண்டும் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு தேவையான ஆற்றல் தருகிறது. கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் உற்பத்தியை பாதிப்படைந்துவிடும். 


இந்த தருணத்தில்தான் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வரும். இந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை நோய்க்கு நாம் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் வகைகளை எடுத்துக் கொள்கிறோம். 

இந்த மருந்து மாத்திரை மற்றும் இன்சுலின் போன்றவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தினாலும் உடல் உறுப்புகளை காலப்போக்கில் பாதிப்படைய செய்கிறது. ஆனால் மிக எளிதாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் இருந்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.  

தினமும் துளசி காலையில் வெறும் வயிற்றில் இரண்டு இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 

முருங்கையிலை சிறிது முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனை வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். 

ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும் பொழுது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும். 

நாவல் பழம் தினமும் காலையில் ஐந்து அல்லது ஆறு நாள் பழங்களை சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நாவல் பழ விதைகளை பொடி செய்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும். 
மேற்கண்ட தகவல்கள் அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக மருத்துவம் செய்து கொள்வதைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment

Adbox