"

Thursday, March 29, 2018

ஏலக்காய் தேநீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள் - cardamom tea


ஏலக்காய் பொடித்து, அந்த தண்ணீரில் போட்டு ஒரு கிராம்பு சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். நீண்ட நேரம் கொதிக்க வைக்காமல் ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையெனில் ஏலக்காயில் உள்ள துவர்ப்பு சுவை அதிகமாக நீரில் இறங்கிவிடும்.அதனுடன் பாதியளவு தண்ணீரைக் கலந்து சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம்.

இந்த தேநீர் பருகுவதால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், மலச்சிக்கல் பிரச்சனை ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை இது தீர்த்திடும்.

ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண்களை இது போக்கும். அதே போல கெட்ட நாற்றம் வருவதையும் தடுக்கம்.ஏலக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதனால் இளமையுடன் இருக்க இது உதவிடும்.



No comments:

Post a Comment

Adbox