கிரிப்டோகரன்சி ( பீட்காய்ன்) வர்த்தகத்தை தடை செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே தயக்கம் காட்டிய நிலையில் ஆசியவின் இருக்கும் நாடுகள் மற்றும் இதர நாடுகள் துணிச்சலாக பிட்காய்ன் வர்த்தகத்தை தடை செய்துள்ளது. இந்தியா, வங்கதேசம், வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் தானாக முன்வந்து கிரிப்டோகரன்சி வர்த்தம் என்பது சட்டவிரோதம் என அறிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி ( பிட்காய்ன்) மதிப்பு சர்வதேச சந்தை அளவில் கடந்த வெள்ளிகிழமை 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிட்காய்ன் தவிர ஈதிரியம் மற்றும் ரிப்பல் உள்ளிட்ட காய்ன்களின் மதிப்பும் தலா 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment