கடந்த ஒரு வாரமாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் பள்ளி பணிகள் முடங்கி உள்ளது.
தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எங்களால் இயன்ற அளவு அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எனவே எனவே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஒரு இறுதி வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இன்று பள்ளியில் பணியில் எந்தவித நிபந்தனையுமின்றி பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் இன்று பள்ளியில் சேராத ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவருடைய பணியிடம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விடும் என ஆசிரியர்கள் பள்ளி திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment