"

Wednesday, February 14, 2018

மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு

நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து, நாளை நமதே என்ற முழக்கத்துடன் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார் கமல். தொடர்ந்து அன்றைய தினம் மதுரையில் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது, மதுரை அரசரடி, ரயில்வே மைதானத்தில் கட்சியின் முதல் மாநாட்டை கமல் கூட்டுவார் என எதிர்பார்ப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு சுமார் 1 லட்சம் பேர் திரளுவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் நாளை (பிப்.15) அல்லது நாளை மறுநாள் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுப்பற்றி கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கட்சியின் பெயர் ,கொடி, சின்னம் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதா? அல்லது அதற்கு முன்பாகவே பதிவு செய்வதா என கமல் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றனர்.இதனிடையே கமல், தன் நற்பணிமன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

No comments:

Post a Comment

Adbox