"

Sunday, February 11, 2018

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! உஷார்...

ளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய எண்ணெய் நிறுவனங்கள், டேங்கர் லாரிகளுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் மண்டல வாரியான டெண்டர் மூலம் வாடகைக்கான விலை புள்ளியை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது.
மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மண்டல வாரியாக அறிவிக்கப்பட்ட வாடகை டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு, இனி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே டெண்டர் அறிவிக்கப்படும் என்றும், வாடகை டெண்டரில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதத்தில் அறிவித்தது.
மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால், தமிழக பதிவெண்கள் கொண்ட லாரிகள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என  தமிழக டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் அவர்கள் கடந்த மாதம் முறையிட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி அறிவித்தன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் முறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை திரும்ப வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கும் என அறிவித்துள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்களின் இந்த அறிவிப்பால், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox