"

Sunday, July 14, 2019

எடிட்டிங் செய்ய தனி ஒரு ஆப் பயன்படுத்த தேவை இல்லை வாட்ஸ்அப்பிலே செய்து கொள்ளலாம்.




வாட்ஸ்அப் தொடர்ந்து பயனரகளுக்கு புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, மேலும் 9 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் பயனர்களுக்கு மிக சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.


தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.



புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது.புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகியுள்ளன. 


No comments:

Post a Comment

Adbox