"

Sunday, July 14, 2019

விண்வெளி நிலையத்திலிருந்து இருந்து எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படங்கள்

விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பேரி வெப்பமண்டல புயல்
நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், ஜூலை 11 ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னாள் தாக்கப்பட்ட பேரி வெப்பமண்டல புயலின் மேகங்களை படத்தில் காணலாம். 



ஹயாபூசா 2 டச் டவுன்
ஹயாபூசா 2 விண்கலத்தில் அமைந்துள்ள கேமரா, ஜூலை 10 ஆம் தேதி இந்த புபாய்ப்படத்தை எடுத்துள்ளது. ரியுகு என்ற சிறுகோள் மேற்பரப்பில் ஹயாபூசா 2 விண்கலம் தரையிறங்கிய 4 வினாடிகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தைக் அருகில் படம்பிடித்த புரோபா -2
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் புரோபா -2 செயற்கைக்கோள், நான்கு விதமான சூரிய கிரகணங்களைக் விண்வெளியில் கண்டுள்ளது. ஜூலை 2, 2019, அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை படம்பிடித்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



நிலவின் ஒளியில் பூமியின் ஏர்கிளோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் எடுத்த இந்த புகைப்படத்தில் "ஏர் க்ளோ" என்று அழைக்கப்படும் பூமியின் வளிமண்டலத்திற்கு நுட்பமான பச்சை ஒளியை நிலவின் ஒலியுடன் படம்பிடித்துள்ளனர்.

நட்சத்திர தடங்கள்
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மின்னல் புயல்களின் நீண்ட வெளிப்பாடு புகைப்படம் இதோ.




செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட தூசி புயல்
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ஈஎஸ்ஏ) மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர், கடந்த சில மாதங்களாக செவ்வாய் கிரகத்தின் வட துருவத்திற்கு அருகே ஏற்பட்டுள்ள பல தூசி புயல்களைப் கண்காணித்து வருகிறது. மே 29 ஆம் தேதி அன்று நிகழ்ந்த தூசி புயலின் தாக்கத்தை இந்த செயற்கைகோள் படம்பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox