வரலாற்றில் இன்று ஜூலை 8 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.
நிகழ்வுகள்
1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தான்.
1815 – பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
1859 – சுவீடன்-நோர்வே மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான்.
1889 – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.
1892 – நியூபவுண்லாந்தின் சென் ஜோன்ஸ் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1982 – ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 – ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
2006 – ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
பிறப்புகள்
1839 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1937)
1906 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. 2005)
1914 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 6வது முதலமைச்சர் (இ. 2010)
1949 – ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (இ. 2009)
1972 – சௌரவ் கங்குலி, இந்தியத் துடுப்பாளர்
1977 – மிலோ வேண்டிமிக்லியா, அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1623 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1554)
1695 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு இயற்பியலாளர் (பி. 1629)
1822 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1792)
1939 – ஹேவ்லாக் எல்லிஸ், ஆங்கிலேய உளவியலாளர், எழுத்தாளர் (பி. 1859)
1980 – மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழறிஞர் (பி. 1900)
1989 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (பி. 1924)
2006 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1908)
2007 – சந்திரசேகர், 9வது இந்தியப் பிரதமர் (பி. 1927)
2011 – கா. கலியபெருமாள், மலேசிய எழுத்தாளர் (பி. 1937)
2012 – ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
2014 – நீலமேகம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
No comments:
Post a Comment