"

Saturday, April 20, 2019

ஆபரேஷன் இல்லாமல் இயற்கை முறையில் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சுவையான ஜூஸ்

ஆபரேஷன் இல்லாமல் இயற்கை முறையில் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சுவையான ஜூஸ்

இன்று பலரும் சந்திக்கும் நோய்களுள் சிறுநீரக கற்கள் பிரச்சினையும் ஒன்றாகும்.

சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணம் உடலில் அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது தான்.இது சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.இதற்காக கண்ட கண்ட மருந்துகளை குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதற்கு பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் சிறந்தாக கருதப்படுகின்றது. இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் அற்புத ஜூஸ் குறித்து காண்போம். 

தேவையான பொருட்கள்  ஆரஞ்சு - 1, ஆப்பிள் - 1, தர்பூசணி - 4 துண்டுகள், ஏலுமிச்சை - 1, ஐஸ் கட்டிகள் - 4 . 

தயாரிக்கும் முறை ஆப்பிளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலுரித்து, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் இரண்டையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் அரைத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்தால், ஜூஸ் ரெடி, இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க வேண்டும்.

அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும் குடிப்பது நல்லது. இந்த ஜூஸில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்களை உடைப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது.மேலும் இது உடலில் கால்சிய தேக்கத்தைக் குறைக்கும். மேலும் இந்த ஜூஸில் உள்ள தர்பூசணியில் நீர்ச்சத்தும், பொட்டாசிய சத்தும் உள்ளது. இதுவும் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும்.

No comments:

Post a Comment

Adbox