"

Tuesday, July 2, 2019

வரலாற்றில் இன்று ஜூலை 2 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜூலை 2 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1578 – மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
1698 – தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1853 – ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1876 – மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
1917 – ஐக்கிய அமெரிக்கா, இலினொய் மாநிலத்தில் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்க்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
    1940 – சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1941 – உக்ரைனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் நாசி ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1962 – முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.


1976 – 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.
1990 – மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார்.
2004 – ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
பிறப்புகள்
1877 – ஹேர்மன் ஹெசே, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் (இ. 1962)
1925 – பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் பிரதமர் (இ. 1961)


1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
இறப்புகள்
1566 – நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
1582 – அக்கெச்சி மிட்சுஹீடெ, ஜப்பானிய சாமுராய் (பி. 1528)
1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899.

No comments:

Post a Comment

Adbox