மாறிவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக பல்வேறு சேவைகளையும் நாம் மொபைல் தொலைபேசி மற்றும் கணிப்பொறிகளில் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாததாகிவிட்டது. வங்கி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் பணப் பரிவர்த்தனைகள் நம்முடைய தனிப்பட்ட அந்தரங்க தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய நினைவகங்கள் போன்றவற்றை நாம் கடவுச்சொல் என அழைக்கப்படும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
உலகில் பெரும்பாலானோர் கடவுச்சொல்லை மறந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் சில எளிமையான கடவுச் சொற்களை பயன்படுத்துவது வழக்கம். அதுபோன்ற கடவுச்சொல்களால் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் வங்கி பண பரிவர்த்தனை போன்றவை எளிதில் மற்றவர்களால் ஹேக் செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு எளிதில் ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்டு களின் தொகுப்பு உங்களுக்காக.
123456, 123456789, qwerty, Password, 1111111, Ashley, Michael, Daniel, Andrew, Justin, Tamil nadu, chennai, etc...
சரி நாம் இப்பொழுது எவ்வாறு ஒரு நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய பாஸ்வேர்டை உருவாக்குவது . உதாரணமாக நம்முடைய மகன் அல்லது மகளின் பிறந்தநாளை வைத்து எளிதில் கவனம் கொள்ளக் கூடிய ஒரே பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம் my daughter's birthday one two zreo six two zero one nine.
இவ்வாறு ஒரு பதத்தை உருவாக்கி அதில் உள்ள முதல் எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும். அதாவது உதாரணத்துக்கு my என்பதற்கு m என பயன்படுத்துதல் அல்லது கேப்டன் லெட்டரை பயன்படுத்துதல் M "Mdbozstz19$" இதில் மேலே உள்ள வாக்கியத்தில் முதல் எழுத்துக்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் என்பது முதலெழுத்து அல்லது ஏதாவது ஒரு எழுத்து கேப்பிட்டல் லெட்டர் மற்ற எழுத்துக்கள் ஸ்மால் லெட்டர் ஒரு numerical அதாவது எண்கள் 1 2 3 அதனுடன் ஸ்பெஷல் லெட்டர் எனப்படும் $ # @ * போன்ற சிறப்பு எழுத்துக்களை பயன்படுத்தும் போது வலிமையான பாஸ்வேர்டினை உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறான பாஸ்வேர்டுகளை உருவாக்கும் பொழுது நம்முடைய இணையதள கணக்குகளில் எளிதாக எவரும் ஹேக் செய்ய முடியாது.
No comments:
Post a Comment