"

Saturday, June 8, 2019

மண்ணீரல் வீக்கத்தால் அவஸ்தையா ..? விடுபட எளிய வழிமுறைகளை காண்போம்...


உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று மண்ணீரல். இந்த மண்ணீரல் ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பணுக்களை அகற்றுவது அதனுடைய முக்கிய பணியாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடிய பணியினை மண்ணீரல் செய்து வருகிறது. 




இந்த மண்ணீரல் அதிகப்படியான கொழுப்பு புரோட்டீன் போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது வீக்கமடைந்து சரிவர செயல்படாத நிலையை அடைந்துவிடும். இதனால் நம் உடல் நிலை பெரிதும் பாதிப்படைகிறது.  மண்ணீரல் வீக்கத்திற்கு முக்கியமான காரணம் நமது உணவு முறையே. 

அத்தகைய மண்ணீரல் பிரச்சனையிலிருந்து விடுபட எளிய வழிமுறைகளை பார்ப்போம் 


மண்ணீரல் வீக்கம் இருக்கக்கூடியவர்கள் கொழுப்புப் பொருட்களை உண்பதை தவிர்த்து விடுவது நலம். தக்காளி விதையில் உள்ள இயற்கை பொருட்கள் மண்ணீரலின் பாதிப்பை மேலும் அதிகரித்து விடும். எனவே தக்காளியை தவிர்த்து விடுதல் நன்மை. கொழுப்பு மற்றும் புரோட்டின் நிறைந்த மாட்டிறைச்சி போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் மண்ணீரல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல் மது அருந்துதல் சிகரெட் குடித்தல் போன்றவையும் மண்ணீரலின் பாதிப்பினை அதிகப்படுத்திவிடும். எனவே இவற்றையும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நலம். 

மண்ணீரல் பாதிப்பு இருக்கக் கூடியவர்கள் இயற்கை முறையில் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம். 


நாவல் பழம் எடுத்துக் கொள்ளும் பொழுது மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். 


தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் நிணநீர் மண்டலம் சுத்தமாவதோடு, மண்ணீரல் இயக்கத்தையும் குறைக்க உதவி புரியும். 




மூணு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் சோம்பு மற்றும் அரை ஸ்பூன் ஓமம் கலந்து சாதாரண நீருக்கு பதிலாக இந்த சோம்பு ஓமம் கலந்த நீரை தினந்தோறும் பருகும்போது மண்ணீரல் வீக்கம் சரியாகும். 


ஒரு கப் பீட்ரூட் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து தினமும் குடிப்பதால் மண்ணீரல் வீக்கம் குறைவதோடு மண்ணீரல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவி செய்யும்.

குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி மண்ணீரல் வீக்கத்தை சரி செய்வதோடு மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த குடைமிளகாய் பயன்தரும். மேற்கண்ட உணவு முறைகளை பின்பற்றும் போது மண்ணீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Adbox