வரலாற்றில் இன்று ஜூன் 24 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக
நிகழ்வுகள்
1314 – ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1340 – நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
1509 – எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1571 – மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
1597 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.
1662 – மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.
1664 – நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.
1812 – ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.
1849 – அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.
1859 – சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 – பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1940 – பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.
1948 – சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 – சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
1963 – சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.
1975 – அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1983 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.
1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.
2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1883 – விக்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)
1907 – கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (இ. 1989)
1915 – ஃபிரெட் ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்ந்த வானியல் அறிவியலாளர் (இ. 2001)
1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)
1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்திய இசையமைப்பாளர்
1938 – நீல. பத்மநாபன், எழுத்தாளர்
இறப்புகள்
1908 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1837)
2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)
No comments:
Post a Comment