"

Thursday, June 13, 2019

வரலாற்றில் இன்று ஜூன் 13 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜூன் 13 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக

நிகழ்வுகள்
1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
1886 – பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.
1917 – முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.

1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.
1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.
1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.
2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
  2007 – திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.

பிறப்புகள்
1831 – ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (இ. 1879)
1897 – ஜெப்ரி ஃபார்ன்பீல்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1974)
1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)
1944- பான் கி மூன், ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளர்
1966 – கிரிகோரி பெரல்மான், ரஷ்யக் கணிதவியலாளர்
1969 – சார்ல்ஸ் ஃபோர்வார்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

இறப்புகள்
1972 – கியோர்க் வொன் பெக்கெசி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
2012 – மெஹ்தி ஹசன் ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகர். (பி. 1927).

No comments:

Post a Comment

Adbox