விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வசதி வரும் டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்ப அப்டேட்ஸ் கொடுத்து வருகிறது. தங்களது அப்டேட்ஸூக்கு ஏற்ப செயல்திறன் இல்லாத செல்போன்களில் இருந்து வாட்ஸ் அப் தனது சேவையை அவ்வப்போது நீக்கியும் வருகிறது.
சில ஆண்டுகள் முன்னர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ் புக் கைப்பற்றியது.
அது முதல் மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்று பேஸ்புக் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரும் வாட்ஸ்ஆப் அப்டேட், விண்டோஸ் போன்களில் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்கள் மட்டும் இன்றி விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
அதனை சரி செய்ய யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் என்ற செயலியை வாட்ஸ்ஆப் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment