இயற்கையின் மீது மனிதன் தொடுக்கக்கூடிய தாக்குதல் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மணல் வளம், கடல் வளம், காடுகள் வளம், மலை வளம் என அனைத்தும் மனிதனால் அழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை வருங்காலங்களில் மக்கள் சந்திக்க நேரும் என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். ராயல் பொடானிக் கார்டனின் அறிவியல் இயக்குநர் பேராசியர் அலெக்ஸாண்ட்ரே, "இந்த கிரகத்தின் உயிரினங்கள் மிகவேகமாக அழிந்து வருவதற்கு போதுமான ஆதாரங்கள் இப்போது உள்ளன" என்கிறார்.மேலும் அவர், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நிலை ஏற்பட்டது. அதற்கு காரணம் ஒரு சிறு கோள் இந்த பூமியை மோதியது. ஆனால், இந்த முறை இப்படியான அழிவுக்கு காரணம் மனிதர்களின் தவறுகள் மட்டுமே" என்கிறார்.
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமுர் சிறுத்தை, கறுப்பு காண்டாமிருகம், போர்னியன் ஒரங்குட்டான், க்ராஸ் ரிவர் கொரில்லாக்கள், சுமத்ரன் யானை ஆகிய 5 விலங்குகளும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
விவசாயம் எரிபொருள் வாழ்விடம் போன்றவற்றுக்காக காடுகளை அழிப்பதனால் பல்லுயிர் பெருக்கம் ஆனது சிதைந்து வருகிறது. இதன் காரணமாக சிறிய உயிரினங்களான எலி தவளை பாம்பு பறவை இனங்கள் முயல் போன்றவை மிகவும் அரிதாகி வருகிறது. இந்தோனேஷிய காடுகளில் அதிக அளவு மழைக்காடுகள் இழந்துள்ளது இதனால் அங்கு வசிக்கக்கூடிய ஒரங்குட்டான் அழிவின் விளிம்பில் சென்றுள்ளது அதேபோல சுமித்ரா காடுகளில் பறவை இனங்களும் அதிக அளவில் அழிந்து வருகிறது.
அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக அமேசான் காடுகளிலும் அதிக அளவு மேய்ச்சல் நிலமாக மாற்ற படுத்தினாலும் சுரங்க கட்டமைப்பினாலும் அமேசான் காடுகளி பல்லுயிர் பெருக்கம் சிதைந்து வருவதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மனிதனுடைய தேவையை நோக்கி காடுகளையும் இயற்கை வளங்களையும் அதிகளவில் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டுவதே இவற்றை கட்டுப்படுத்தப் படவில்லை என்றால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கே இவை ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment