சாப்பிட்ட உடனே ஒருபொழுதும் இவை செய்யக்கூடாது என தாத்தா பாட்டி கூறி கேட்டிருப்போம் இல்லையா? ஒவ்வொரு செயலிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு என்பதை இந்த தகவல் உங்களுக்கு புரியவைக்கும்..
ஒருபொழுதும் சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடக்கூடாது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
தேநீர் குடிக்க கூடாது..!
தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பது சிக்கலாக்கி விடும்.
புகை பிடிக்கக்கூடாது...!
உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட் 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
குளிக்கக் கூடாது ஏன் தெரியுமா?
சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்கத் தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கின்றன.
உடனே நடக்கக்கூடாது..!
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிடும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது
சாப்பிட்டதும் தூங்கக்கூடாது..!
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.
No comments:
Post a Comment