"

Friday, May 3, 2019

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஜூஸ் தயாரிப்பது எப்படி..?



லெமன் - புதினா ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஓர் அற்புத பானம். வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள்  இந்த ஜூஸ் குடிக்கலாம். லெமன் - புதினா ஜூஸ் செய்வது எப்படி 

எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

* எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
* இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.
* புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.
* இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.
* அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.
* சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

No comments:

Post a Comment

Adbox