கொசுக்களால் மட்டுமே மனிதர்களும் இன்ன பிற விலங்கினங்களும் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் படி கொசுவினால் ஒவ்வொரு வருடமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. கொசுவினால் மலேரியா, டெங்க், மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் மக்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கொசுவினை ஒழிக்கவும் அதன் இனப்பெருக்கத்தை தடை செய்யவும் கூகுள் நிறுவனம் அதன் தாய் நிறுவனமான ஆல்பஃபெட்டும் முன் வந்துள்ளது. ஆல்பஃபெட்டின் 2017 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்த ஆராய்ச்சி திட்டத்தி டீபக் ( Debug) என்று பெயரிட்டு கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்து வருகிறது. ஆண் கொசுக்களுக்கு வால்பச்சியா (Wolbachia) என்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் பெண் கொசுக்களில் கருவுறாமை ஏற்படுகிறது எனக் கண்டறிந்துள்ளது.

பாதிக்கப்பட்ட கொசுக்கள் மறு உற்பத்திசெய்ய முடியாததால் மெதுமெதுவாக கொசு இனம் அழிந்து விடும் என்று தெரிவிக்கிறது. ஆறு மாத காலப்பகுதியில் கலிபோர்னியாவில் உள்ள ஃப்ரெஸ்நோவில் 15 மில்லியனுக்கும் அதிகமான கொசுக்களை பாக்டீரியாவினால் பாதிப்படையச் செய்துள்ளனர்.
பெண் கொசுக்கள் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக குறைத்தது. 95 சதவிகிதம் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைத்தது
பெண் கொசுக்கள் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக குறைத்தது. 95 சதவிகிதம் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைத்தது
டீபக் திட்டம் நல்லதொரு தொடக்கம். ஆனால் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. சமூகக் குழுக்களுடன் கை கோர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. டீபக் திட்டம் நோய்கள் உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டீபக் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
.
நாம் மில்லியன் கணக்கான மக்கள் நோயின்றி நீண்டகாலம் வாழ இந்த திட்டம் உதவும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment